சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு
கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
காரணம்
கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்டதே இந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
எனினும், வெளிநாட்டினர் அதிகளவில் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. அத்துடன், அங்கு குடியேறும் மக்களுக்கு இதர வசதிகள் செய்து தருவதிலும், வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது.
கல்வி அனுமதி திட்டம்
இதன்படி, இந்த விசா திட்டங்களை 2024 நவம்பர் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில், கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களை நேரடியாக தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கல்வி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்குமாறு கனேடிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயன்முறையை நியாயமாக பேணுவதற்கு கனடா உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
