பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு
17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை - அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பி்ள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
மாணவி இறப்பதற்கு சற்றுமுன்னர், கைகளை வெட்டி, இரத்தத்தினால் கடிதமொன்றினை எழுதி இளைஞரொருவருக்கு அனுப்பியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். உறவை நிறுத்துமாறு பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதிக்கிரியைகள்
உயிரிழந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (07) அலவத்தன்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
