கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதார்.
திருகோணமலை- மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (16 வயது) மாணவனே நேற்று (02.11.2022) மாலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கிண்ணியா தாருல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்த மாணவன் குளிப்பதற்காக அருகில் உள்ள கிணற்றிற்கு சென்றதாகவும் இவர் அரபிக் கல்லூரிக்கு நேரத்தில் வருகை தராததால் சக மாணவர்கள் தேடிப் பார்த்ததாகவும் மாணவனின் காலணி கிணற்றுக்கு அருகில் இருந்ததாகவும் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கிணற்றில் இறங்கி பார்த்த போது விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகளின் தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்த மாணவனின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவனின் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும்
கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
