பெற்றோரின் பொறுப்பற்ற செயல்! பாடசாலை மாணவியொருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்திய நிலையில்,திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில்,இன்று (22) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி மனமுடைந்து மண்ணெண்ணெய் அருந்திய நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வாரங்களுக்குப் முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,சுமார் மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து உயிரிழந்த சிறுமியின் தாயார் என்.நாகராணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது,
என் மகள் அடிக்கடி கோபம் கொள்பவள். கற்றல் மற்றும் வரைவதிலும் வல்லவர். கடந்த மாதம் 27ம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார்.பின்னர் சிறிது நேரம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து வாயு நுரை வெளியேறியது. எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
இதன்போது அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தயார் தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri