நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (15வயது) எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாக நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இரவு 8.15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



