பல்கலைக்கழக மாணவியிடம் சேஷ்டைவிட்ட மாணவன் கைது
கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வரும் மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கியிருந்து வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
