யாழ். பல்கலைக்கழகத்தில் இனவாதமா..! போராட்டக் களத்தில் மாணவர் குற்றச்சாட்டு
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றையதினம்(19.03.2026) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்களமயமாக்கல் நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு துறைசார்ந்த விரிவுரைகள் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம். தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண்.
இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என்றார்.
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்