ஒத்த அறிகுறிகளுடன் பரவும் தொற்றுக்கள் : மக்களே அவதானம்
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பேற்படுத்தும் போராட்டங்களால் தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கும்.
ஆகவே போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைக்காலத்தில் டெங்குப்பரவலும் தீவிரமடைந்துவருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கோவிட் - 19 வைரஸ் தொற்று மற்றும் டெங்குநோய் ஆகிய இரண்டினதும் அறிகுறிகள் பெருமளவிற்கு ஒத்தவையாக இருப்பதனால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
