வாழைச்சேனை சபை பணியாளர் தாக்கியமைக்கு நீதி கோரி போராட்டம் (Video)

Protest Arrest Hospital Valaichenai
By Navoj Jan 07, 2022 12:05 PM GMT
Report

வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதார பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கிணங்க அரச காணியில் தற்காலிக கொட்டகை அமைத்துள்ளதை அகற்றுமாறு சபையின் பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நேற்று கொட்டகையை அகற்றப்பட்டது.

இதன்போது அக்காணியில் கொட்டகை அமைத்தவர் வருகை தந்து கல்லினால் தாக்குதல் நடத்திய போது பணியாளர் எம்.குமாரவேல் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்த நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையின் பணியாளர் தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்கப்பட்ட பணியாளருக்கு நீதி கோரி சபை உத்தியோகத்தர்களால் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித்திடம் மகஜர் வழங்கப்பட்டதுடன், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர்வதுடன், பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை இடம்பெறாது எனவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

பணியாளரைத் தாக்கிய சந்தேக நபரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காவல்துறையே ஊழியர்கள் மீதான தாக்குதலைக் கண்டு மௌனம் ஏன், ஊழியரைத் தாக்கிய குற்றவாளியைக் கைது செய், நீதி கிடைக்கும் வரை எமது பணிகளிலிருந்து விலகி நிற்கின்றோம், தாக்காதே தாக்காதே ஊருக்குள் பாடுபடும் ஊழியரைத் தாக்காதே, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைளுடன் நீதி கோரிய கோசங்களுடன் போராட்டத்தில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குறித்த நபர் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பணியாளர்கள் கோரி வரும் நிலையில் திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையைச் செயற்படுத்தும் வகையில் பணியாளர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

மேலும் தவிசாளரினால் கட்டட நிர்மாண பணியினை மேற்கொண்ட ஆதம்லெப்பை முஹமது நியாஸ்க்கு 2022.01.03ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில்,

இது தொடர்பில் எதுவித அனுமதியும் இன்றி தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிரந்தர கட்டட நிர்மாணப் பணியானது பிரதேச சட்டம் மற்றும் வீடமைப்பு தொடர்பான விதிகளை மீறும் சட்டத்திற்கு முரணான செயலாகும்.

குறித்த காணியானது கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ்வரும் அரச காணியெனப் பிரதேச செயலாளரின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது சபையின் அனுமதி இன்றி நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடம் என்பதால் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டட பகுதியினை அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாகக் குறித்த கட்டடம் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவினங்களும் தங்களிடம் இருந்து அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US