தமிழ் மக்களின் போராட்டம் வேடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல! சிறிநேசன் எம்.பி பகிரங்கம்
தமிழ் மக்களின் போராட்டம் விளையாட்டுக்காக, வேடிக்கைகளுக்காக, பகிடிகளுக்காக, ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த போராட்டத்தை செய்வதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆட்சியாளர்கள். இந்த போராட்டத்துக்குரிய நியாயங்களை தந்து பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்கூட்டியே தந்திருந்தால் 50,000 மாறவர்கள் தங்களுடைய உயிரை அர்ப்பணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.11.2026) மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மயிலத்தமடு பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு தற்போது 17 ஆண்டுகள் கடந்து இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை மறுக்கின்றார்கள். மயிலத்தமடு மாதவனை பிரச்சினையைக்கூட தீர்ப்பதற்கு அவர்கள் முன் வருகின்றார்கள் இல்லை.

எமது மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலமையில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம். எனவே மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவும்தான் எமது மக்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.
பயங்கரவாததடை சட்டத்தை அகற்றுகின்றோம் என்று சொல்லிவிட்டு தற்போது அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கின்ற என்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு உள்ளார்கள், அதுபோல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக என இன்னும் ஒரு சட்டத்தை கொண்டு வர இருக்கின்றார்கள்.
சட்டங்கள்
சட்டங்கள் கொண்டு வரப்படும் போது அது சாதாரணமாக அமைந்து விடும்.அது நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதுதான் அதனுடைய கஷ்டங்கள் தெரியும்.

இதை மண்ணில் பிறப்பிலிருந்து நாங்கள் இன்று வரை வாழ்ந்து வருகின்றோம். யுத்தம் ஆரம்பித்த காலம் யுத்தம் முடிந்த காலம் வரைக்கும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றோம். இந்த மண்ணில் பட்ட வேதனைகள், கஷ்டங்கள், மரணங்கள் என்பன எனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டார்.
பால்கனியின் 60வது மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்: 2 வார கோமாவிற்கு பிறகு கண் விழிப்பு News Lankasri