இராணுவமயமாக்கலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாடு முழுவதும் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக நீர்கொழும்பில் ஒரு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (05) மாலை நீர்கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
”கொத்தலாவல சட்டத்தை மீளப் பெறுங்கள். வடக்கு உட்பட நாடு முழுவதும் இராணுவமயமாக்கப்படுவதை நிறுத்துங்கள்” எனக் கோரும் பிரதான பதாதையை ஏந்தியவாறு, அதிபர்கள் ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதை எதிர்ப்போம், கல்வியை இராணுவமயமாக்க வேண்டாம், இராணுவமயமாக்கலை எதிர்க்கிறோம்' போன்ற வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
சீருடை அணிந்த ஏராளமான பொலிஸார் போராட்ட இடத்திற்கு அருகில் பணியில் ஈடுபட்டிருந்ததாக, சிவில் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
