யாழ். அனலைதீவில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
யாழ்.அனலைதீவு இறங்கு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலய முன்றலில் அக்கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(25.06.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்து சேவை
அனலைதீவு ஐயனார் ஆலயத்திலிருந்து இடிக்கப்பட்ட கற்கள் மண்களை, மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, கரையோர மூலவள முகாமை திணைக்கள அனுமதியின்றி கொட்டியதற்காக கூறி அந்த மண்ணை அகற்றக்கோரி ஆலய நிர்வாகத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆலய நிர்வாகத்தினர் வாகனங்கள் மூலம் கொட்டிய மண்ணை மீள எடுக்க முனைந்த போது மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, படகு போக்குவரத்து சேவையை முற்றாக நிறுத்தி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எந்த காரணம் கொண்டும் கொட்டப்பட்ட மண் அகற்றப்படக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து தங்களுக்கு கிடைத்த பயனை விசமிகளின் செயலால் குழப்ப முனைகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஈபிடிபி உறுப்பினர் கமல் அவர்கள் முன்வந்து கொட்டிய மண்ணை மீள் எடுக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து படகுசேவை வழங்குமாறும் இதற்கான தீர்வு நாளை தெரிவிப்பதாகவும் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
