மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு (VIDEO)
தினமும் கவனயீனமான செயற்பாடுகளினால் பல்வேறு அசம்பாவிதங்கள்
இடம்பெறுகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் கதவு ஒன்றை பொருத்துவதற்காக பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருந்த துளையிடும் கருவியின் வயரானது கதவில் இணைக்கப்பட்டிருந்த தகரத்தில் பட்டிருந்த நிலையில் குறித்த தகரத்தில் துளையிடும் கருவியினால் துளையிட முயற்சித்தபோது மின்சாரத்தில் குறித்த இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கப்பட்டவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கோமத்லாவெளி பிரதேசத்தில் பயிர்ச்செய்கை செய்துவரும் தனது பண்ணைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியில் சிக்குண்டு பண்ணை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முறையற்ற முறையில் மின்சார கம்பிகள் இணைக்கப்பட்டு பயன்படுத்தியதனால் இவ்வாறு மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கா ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
செய்தி : குமார் மற்றும் கனகராசா சரவணன்





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
