தண்டுவானில் வீட்டுக்கூரைக்கு ஆபத்தாக மாறிய கடும் காற்று
முல்லைத்தீவு மாவட்டம் தண்டுவானில் இன்று மாலை வீசிய கடும் காற்றினால் கிராமத்தின் பல இடங்களில் பாரியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
காற்றுடன் மழையும் சேர்ந்து கொண்டு தண்டுவான் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தண்டுவான் கிராமசேவகர் ஜெயசீலன் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக் கூரை சேதம்
தண்டுவானில் வசித்துவரும் நாகராசா சுசிலாதேவியின் வீட்டின்.முன்பகுதியில் போடப்பட்டிருந்த கூரைத்தகரங்கள பிடுங்கி ஏறியப்பட்டிருந்தன.
முன்பகுதியில் இருந்த பொருட்கள் மற்றும் உந்துருளிகள் மழையில் நனைந்திருந்ததை புகைப்படங்களில் அவதானிக்கலாம்.
மரங்களின் இலைகள் தென்னையின் ஓலைகள் என காற்றினால் ஒடிந்து விழுந்துள்ளதை அவதானிக்கலாம்.
அத்தோடு கோழிக்கூட்டு கூரையும் பிடுங்கி எறியப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.
புலனக் குழு
பகிர்வு தகவல்களை விரைவாக மக்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக புலனக்குழுவை உருவாக்கி அதனூடாக தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும் நடைமுறை கிராமசேவகர் மத்தியில் இருந்து வருகின்றது.
அந்த முறைமையில் தண்டுவான் கிரமசேவகராக தற்பொழுது கடமையாற்றி வரும் ஜெயசீலன் :
காற்று வீசிய பொழுது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை தண்டுவான் மக்களிடையே விரைவாக கொண்டு சேர்த்திருந்தார்.
அனர்த்தம் முகாமைத்துவம் வரும் முன் காத்தல் மற்றும் வந்த பின் எதிர்கொள்ளல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பொதுமக்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும்.
திடீர் வானிலை மாற்றங்கள் தொடர்பான முன்னறிவிப்புகள் பொதுமக்களுக்கு அதிகளவாக நன்மையளித்து வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

