யாழில் இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை! உருவாக்கப்பட்டது விசேட குழு (Video)
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் போதைப்பொருளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான விரிவான தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
