நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதன்படி கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
