சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் உறுதி - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுரேஷ் சலே ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய கடும்போக்காளர்களை வழிநடத்தினார் என்பதை நிரூபிக்கக் கூடிய வலுவான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிஐடியில் திடீரென மனமாறிய சுரேஸ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
தேவாலயங்களுக்கு அனுப்பிவைத்துள்ள நபர்கள்
தேவாலயங்களில் தகவல்களைத் திரட்டிய சுரேஷ் சலே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக, சுரேஷ் சலே, நான்கு முஸ்லிம் நபர்களைத் தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களுக்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இவ்வாறான விபரங்கள் திரட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஎஸ் தொடர்பு மற்றும் மறைந்திருக்கும் சந்தேகநபர்கள் இந்தத் தகவல்களைத் திரட்டிய பிரதான சந்தேக நபரைச் சாட்சியாளர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட அந்த நபர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதும், தாக்குதலின் பின்னர் அவர் தலைமறைவாகி உள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு புலனாய்வுத் தகவல் வழங்குநர், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.எனினும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை முற்றிலும் உதாசீனம் செய்துள்ளனர்.
தடுத்து வைத்திருந்த நபர் விடுதலை
மேலும், தகவல் வழங்கிய அந்த நபரைச் சட்டவிரோதமான முறையில் நீண்ட காலம் தடுத்து வைத்திருந்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
அதன் பின்னர், சுரேஷ் சலே அந்த நபரை கொழும்பு கலாதாரி ஹோட்டலுக்கு அழைத்து அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளமை குறித்த தகவல்களும் தற்போது கிடைத்துள்ளன.
அசாத் மௌலானாவின் தகவல்கள் உறுதி அசாத் மௌலானா சேனல்-4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சுரேஷ் சலே இந்தத் தாக்குதலுக்குத் தேவையான பின்னணியைத் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.
சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை, பல உயிர்களைக் காவு கொண்டமை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தமை மற்றும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சலே மீது சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் இது தொடர்பான முக்கிய தகவல்களை அவர் மூடி மறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலே குற்றச் செயல்களில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri