நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தம்
அனைத்துப் பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (02.05.2024) நண்பகலில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட
தீர்மானித்துள்ளது.
கடந்த (29.04.2024) திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இந்த வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகம்
அந்த வகையில், கிழக்கு பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பில், இதுவரை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாது நிலுவையாக உள்ள 15% அதிகரிப்பை விரைவாக வழங்க கோரி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர்கள் கடந்த 8 வருடகாலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரசாங்கம் இதற்கான தீர்வை வழங்க தவறியமையால் இந்த தொடர் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படும் என்பன உட்பட பல்கலைக்கழகத்தை நடாத்திச் செல்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - நிலவன்
யாழ். பல்கலைக்கழகம்
அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் 02.05.2024 வியாழன் நண்பகலில் இருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.
எனவே பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் குறித்த காலப்பகுதியில் பணியிடங்களுக்குச் செல்லாது விடுவதுடன், 02.05.2024 நண்பகல் 12 மணிக்கு பணியிடங்களிலிருந்து கையொப்பமிட்டு வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, 12 மணிக்கு நடைபெறும் விளக்கப்பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பயிலுநர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், மனிதவலு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
