கொழும்புத் துறைமுக ஊழியர்களின் நான்கு மணிநேர வேலைநிறுத்தம்
கொழும்புத்துறைமுக ஜாயா கொள்கலன் இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க விடுமுறை நாட்களில் பணியாற்றும் கொழும்புத்துறைமுக ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட்டு வந்தது.
ஊக்குவிப்பு கொடுப்பனவு ரத்து
எனினும் நாளையும் நாளை மறுநாளும் வெசாக் விடுமுறை வரவுள்ள நிலையில் அதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை துறைமுக அதிகார சபை ரத்துச்செய்துள்ளது.
இதனை எதிர்த்து கடந்த பத்தாம் திகதி நள்ளிரவில் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை ஜாயா இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவை மீண்டும் வழங்க துறைமுக அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
