இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவில் முன்னெடுக்கப்படும் போராட்டம்
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராமேஸ்வரம் கடற்றொழில் முகத்தில் இருந்து கடற்றொழில் தடைக்காலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற 55 நாட்களில் 61கடற்றொழிலாளர்களையும் ஒன்பது படகுகளையும் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
முன்வைக்கப்படும் கோரிக்கை
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட கடற்றொழில் விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நேரடியாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்றொழில் சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
இராமேஸ்வரம் கடற்றொழிலுக்கு யாரும் கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் வரும் 13ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
