வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு
நாட்டில் இனிமேல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமல் குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாதென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை 4 நாட்களில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லீசிங் நிறுவனங்கள்
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க பொத்துப்பிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாத குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
