அரசாங்க தரப்பில் கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் - அர்ஜூன டி சில்வா
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையானது மோசமாக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் சிரேஷ்ட மருத்துவத்துறை பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதன் காரணமாகவே கோவிட் முதலாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மருத்துவத்துறை பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, காணப்படும் நிலைமை சரியில்லை. இதனால், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமா என்ற கேள்வி இருக்கின்றது.
அரசாங்க தரப்பில் கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri