நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள்
தரமற்ற நிலக்கரி இறக்குமதியாவதைத் தடுக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
தரமற்ற பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, அடுத்த ஆண்டுக்கான நிலக்கரி இறக்குமதிக்கு அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளதுடன், புதிய ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் புதிய விவரக்குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
1 மில்லியன் மெட்ரிக் தொன்கள் விநியோகித்திருந்தால்
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்காக, தலா 60,000 மெட்ரிக் தொன்கள் கொண்ட 25 கப்பல் சரக்கு நிலக்கரியை கொள்முதல் செய்வதற்காக இந்தப் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் வார இறுதி ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி நிலக்கரி வழங்குநர் வழங்கும் அறிக்கைகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, இலங்கை இனிமேல் நிலக்கரி ஏற்றப்படும் துறைமுகத்திலேயே அதன் நிலை, தரம் மற்றும் ஏற்றும் செயல்முறையை உறுதிப்படுத்தும் ஏற்றுதல் துறைமுக அறிக்கையை (load-port report) நேரடியாகப் பெற்றுக் கொள்ளவுள்ளது..
மேலும், புதிய ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் கீழ் தகுதிபெற, வழங்குநர்கள் மற்ற நாடுகளுக்குக் குறைந்தபட்சம் 2 மில்லியன் மெட்ரிக் தொன்கள் நிலக்கரியை வழங்கியதற்கான முந்தைய வரலாற்றைக் (Track record)காட்ட வேண்டும். தற்போதைய சட்டத்தின் கீழ், 1 மில்லியன் மெட்ரிக் தொன்கள் விநியோகித்திருந்தாலே போதுமானது.
பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து
மேலும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான மொத்த வெப்ப மதிப்பை ((Gross Calorific Value – GCV) 5900-லிருந்து 6000-ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

உயர்ந்த GCV என்பது, ஓர் அலகு எடைக்கு உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவு அதிகரிப்பதைக் குறிக்கும். பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டும் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஒரு திறந்த டெண்டர் நடைமுறையின் மூலம் விநியோகஸ்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இது போட்டியை அதிகரித்து, நாடு மிகவும் சாதகமான தெரிவொன்றை தேர்வுசெய்ய உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri