இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு
லிதுவேனியாவின் (Lithuania) வெளிவிவகார அமைச்சகம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கான புதிய விதிமுறைகளை 2024 டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இலங்கையில் உள்ள லிதுவேனியாவின் துணைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, லிதுவேனியா விசா சேவை வழங்குநர்கள் மூலம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் விசா சேவை
இதன்படி, தகுதியான குடும்ப மீள் இணைவு, மருத்துவம் உட்பட்ட கல்வித் திட்டங்கள் மற்றும் கற்கைகள், அதிக திறன் வாய்ந்த வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு மாத்திரமே குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இருப்பினும், பருவகால வேலைளுக்கான விண்ணப்பங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கையில் உள்ள உள்ளூர் விசா சேவை அலுவலகங்கள் மூடப்படுவதால், விண்ணப்பதாரர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் லிதுவேனியாவின் துணைத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam