போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை
போலி செய்திகளை பரப்பும் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஊடக சட்டத்திற்கு துருக்கியின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ஊடக சட்டம்
இன்னும் 8 மாதங்களில் நடைபெறும் தேர்தலுக்கான எதிர்வு கூறல் கருத்துக்கணிப்புகளில் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன், பின்தங்கியுள்ள நிலையில், ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் உறுதியான பிடியை, இந்த விதிகள் உறுதிப்படுத்துகின்றன.
எர்டோகனின் இஸ்லாமிய AKP கட்சியால் இந்த விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும் துருக்கியின் எதிர்க்கட்சிகள் இந்த விதிகளை கடுமையாக எதிர்த்துள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டம், தவறான தகவல்களை பரப்பும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கிறது.
தவறான தகவல்களை பரப்புதல்
தவறான தகவல்களை பரப்புவதாக சந்தேகிக்கப்படும் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை சமூக வலைப்பின்னல்கள் மற்றும் இணையத்தளங்கள், அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
வெளிப்படையாக தவறான தகவல்களை பரப்பும் ஒருவருக்கு, ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றங்களுக்கு இந்த சட்டம் அனுமதிக்கிறது.
தவறான தகவல் மற்றும் அதனுடன் இணைந்த சிறை அச்சுறுத்தல் ஆகியவை, சுய
தணிக்கைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.




