வடகொரியா அதிபரின் கடுமையான மரண தண்டனை உத்தரவு !
வடகொரியாவில் நாட்டின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி உலகத்தை அழைக்க ரகசியமாக தொலைபேசிகளைப் பயன்படுத்திய 10 பேருக்கு இவ்வாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங்கினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவர்கள் தென் கொரியாவில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்காகவும், பண பரிவர்த்தனைக்காகவும், தடை செய்யப்பட்ட சீனா மொபைல் போன் நெட்வொர்க்குகளை பயன்படுத்தியதால், இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகொரியாவில், சீனாவின் மொபைல் நெட்வொர்க்குகள் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. அதன் படி கடந்த மார்ச் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பு மூலம், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி சிக்னல்களைக் கண்டறிதல், வயர்டேப்பிங் சாதனங்கள் மற்றும் சட்டவிரோத மொபைல் போன் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்வதற்கு, கிம் ஜான் உன் மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் நடவடிக்கையாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பலருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும், 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,உலகில் தவறு என்று செய்தால், அதற்கு கொடுமையான தண்டனை கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri