பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலம்! போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டமூலத்தில், போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போதைக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்துவிட்டு,அதற்குப் பதிலாக புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்த கூடும் என்று அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கிடையே குறித்த சட்டமூலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அவ்வாறான குற்றச்செயல்களுக்கு நடைமுறையில் உள்ள தண்டணைகளை விடவும் கடுமையான தண்டணைகளையும், சட்ட ஏற்பாடுகளைகயும் அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதற்காக புதிய சட்டமூலத்தின் ஒரு துணைப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.