இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு கடுமையாகும் சட்டம் : பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கையில் செல்லுபடியாகும் முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டியை செலுத்தும் வெளிநாட்டினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு போக்குவரத்து தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு, சம்பந்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர பிரிவின் கீழ் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதி இல்லையென்றால், அவர்களுக்கு தற்காலிக முச்சக்கர வண்டி உரிமங்கள் வழங்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக முச்சக்கர வண்டி உரிமம்
நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் முச்சக்கர வண்டி செலுத்த விரும்பினால், மோட்டார் வாகனத் துறை மூலம் தற்காலிக முச்சக்கர வண்டி உரிமத்தைப் பெறுவதற்கான வழி உள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சுவிஸ் பெண் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இலங்கையில் சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் உரிமம் இல்லாத வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுவதாக செய்திகள் வந்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |