அரசாங்கத்தை விமர்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : ஜனாதிபதி முடிவு
அரசாங்கத்தை விமர்சித்து வரும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே அரசாங்கத்தை விமர்சித்து வந்த ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தை விமர்சித்து எதிர்க்கட்சியின் பத்திரத்தை வசிக்க ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலைமையில், அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள், அரசாங்கத் விமர்சித்தால், அவர்களில் பதவிகளும் எதிர்காலத்தில் பறிப்போகலாம் என தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோர் அரசாங்கத்தை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும் தற்போது அவர்கள் மௌனமாக இருந்து வருகின்றமை அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
