சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை! - யாழ். அரசாங்க அதிபர்

Jaffna Peoples COVID - 19
By Murali May 13, 2021 11:43 PM GMT
Report

தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

 எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அந்த வகையில் நேற்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது,  இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடை படும், கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும்.

ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,  ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள், பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினை அனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதனால் வெளியில் சகல நடவடிக்கைகளும் செயலிழந்து காணப்படும். எனவே பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது. அரசு அலுவலகங்கள் இயங்காது, பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது.

எனவே இந்த மூன்று நாட்களும் பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டியது அவசியமாகும்.  அத்தோடு வைத்திய சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் செயற்படும். வைத்தியசாலைக்கு அல்லது அத்தியாவசியமான சேவைக்கு வெளியில் செல்வோர் பயண கட்டுப்பாட்டுடன் சென்று வர முடியும்.

மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளி மாகாண போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதாவது உணவுப்பொருட்கள் எரிபொருள் காஸ், அவர்கள் ஏற்கனவே உரிய முறையில் விண்ணப்பித்து பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு என வழங்கப்பட்டுள்ள அனுமதியினை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

 தற்பொழுதுள்ள இந்த இடர் நிலைமையினை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் மட்டத்திலும், பிரதேச செயலர்கள் பிரதேச குழுக்கள் ஊடாக தற்போதுள்ள நிலைமையினை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள். குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள்.

 அந்த வகையிலே பிரதமர் அலுவலகம் ஒருவிசேட வேண்டுகோளை விடுத்துள்ளது, கடந்தமுறை ஊரடங்கு நேரத்தில் பின்பற்றிய நடைமுறையை போன்று இந்த நிலைமையிலும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி பிரதேச மட்டங்களில் அந்த நிலைமை செயற்படுத்தப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி அதேபோல் நாவற்குழி நெற்களஞ்சியம் போன்றன இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் நாவற்குழி நெற்களஞ்சியத்தினை சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.  நாவற்குழி நெற்களஞ்சியத்தை சிகிச்சை நிலையமாக மாற்றினால் அதில் 650க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியும்.

அத்தோடு வட்டுக்கோட்டையிலே 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.  இதனைவிட வடக்கு சுகாதாரப் பிரிவினர் 4 ஆதார வைத்தியசாலைகளை அதாவது தெல்லிப்பளை, பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி இந்த நான்கு ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் சுகாதார பிரிவினர் வடக்கில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது, இந்த நிலைமை ஒரு சவாலான நிலைமையாக காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இந்த சுகாதார கட்டுப்பாடுகளை மிகவும் அனுசரித்து தற்போது உள்ள அபாய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும் .

மேலும் இந்த நிலையிலே போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணங்களை மட்டும் படுத்திகொள்ளுங்கள்.

அத்தோடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி அவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்ளலாம், அத்தோடு அலுவலகங்களுக்கு செல்வோர் தமது அடையாள அட்டையைக் காட்டி தமது பயணங்களைப் தொடரமுடியும்.

அத்தோடு தமது வடபகுதியை பொருத்தவரைக்கும் ஒரு பெரிய சவாலான விடயம் காணப்படுகின்றது, அதாவது சட்டவிரோதமான முறையில் எமது அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது, பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது.

எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது, தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் .அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும்.

எனவே இந்த பயண கட்டுப்பாடானது தொற்றினை கட்டுப்படுத்துவதற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

 அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், கைதுகள் இடம்பெற்றுவருகின்றன.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.  

13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US