நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமம்
நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமத்தை நுவரெலியா(Nuwara Eliya) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஸ்ட்ரோபெரி மாதிரி உற்பத்திக் கிராமம் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின்(Mahinda Amaraweer) பணிப்புரைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 மில்லியன் ரூபா செலவில் 50 விவசாயிகளைப் பயன்படுத்தி 42 பாதுகாப்பான வீடுகளில் இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கை
இந்த ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கைக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஸ்ட்ரோபெரிச் செடிகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான வீடுகளில் செடிகள் நடும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் கூறியுள்ளார்.
புதிய விவசாயத் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 25 வீத சலுகை அடிப்படையில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் இந்தப் பாதுகாப்பான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்திற்காக விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அரசாங்கம் 320 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |