முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை தடுக்க அரச அதிபர் எடுத்த வியூகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்ரவன் விடுத்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதனை அறிவித்துள்ளார்.
குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் கிராமங்கள் தனிநபர்களாக இருப்பின் அவர்கள் தொடர்பான விபரங்களை பொலிஸார் அறியத்தரவேண்டும்.
கால் ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கு மாகாண ஆளுநருடன் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் மாவட்டத்தில் போதைப்பொருள் நடவடிக்கையில் விற்பனையில் ஈடுபடுபவர்கள், பாவனையில் ஈடுபடுபவர்கள், உற்பத்தி செய்பவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கான சரியான நடவடிக்கையினை எதிர்காலத்தில் எடுப்பதற்கான தகவல்களை திரட்டும் நடவடிக்கைக்கு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் திணைக்களங்கள் தகவல்களை தரவேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
