ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஐ.நா தீர்மானத்திற்கு 112 நாடுகள் ஆதரவு - ஈரானுடன் நீடிக்கும் மோதல்
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும், கடல் வழித் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தியும் பஹ்ரைன் மற்றும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்திற்கு உலகளவில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.
ஐ.நாவின் மொத்த உறுப்பு நாடுகளில் சுமார் 112 நாடுகள் இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்துள்ளன.
கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் முதன்மை ஆதரவாளர்களாக உள்ள நிலையில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதில் இணைந்துள்ளன.
17 வருடங்களுக்கு பின் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் கட்டவிழ்க்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரம்..!
பாகிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு
ஏற்கனவே இதே போன்ற ஒரு தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தடுத்து நிறுத்தியிருந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு பெரிய இராஜதந்திர முன்னெடுப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

அதேசமயம், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இன்னும் முட்டுக்கட்டையிலேயே உள்ளது. ஹோர்முஸ் நீர்ச்சந்தியின் மீதான தனது இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் குறித்து துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்தப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளுக்குப் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam