இலங்கையை புரட்டிப்போட்ட புயல்! நீரில் தவித்த பாட்டியை காப்பாற்றி ஒருவரின் உருக்கமான கதை
கம்பளை தொடருந்து நிலையத்தில் இருந்து நீந்தி மரியவத்த என்ற இடத்திற்கு சென்று கூரையில் சிக்கியிருந்த தனது பாட்டியை காப்பற்றியதாக கம்பளையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.
முன்னறிவிப்பு விடுக்கவில்லை
யாரும் உதவிக்கு வரவில்லை. ஊரில் இருந்த இளைஞர்கள் தான் மக்களை காப்பாற்றினர். கம்பளை நகரத்திற்கு 10 அடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து பெருமளவான வர்த்தக நிலையங்கள் முழுமையாக பாதிப்படைந்து பல கோடி ரூபா நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பாரிய கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அரசாங்கத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எவ்வித முன்னறிவிப்பும் விடுக்கவில்லை.
ஒரு பொலிஸார் கூட இன்று வரை வரவில்லை.ஒரு படகு கூட வழங்கவில்லை.நகர சபையும் எவ்வித நிவாரணங்களையும் செய்யவில்லை.சிலருக்கு ஒரு உடை கூட இல்லை.இன்றும் சில வீடுகள் உடைந்து விழுந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.