தீவிரமடையும் சியாரன் புயல்: பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்
பிரித்தானியாவை தற்போது தாக்கி வருகின்ற சியாரன் புயல் காரணமாக அந்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்றும், கனமழையையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரித்தானியா முழுவதும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையான “இரண்டு அம்பர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிலைய தகவல்
அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் நடைமுறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் சேனல் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் “மணிக்கு 70 மைல் முதல் 80 மைல் வேகத்திலோ அல்லது மணிக்கு 85 மைல் வேகத்தில் புயல் கரையைக் கடக்கக் கூடும்” என குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam