உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்
உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைன்-கெர்சனில் உள்ள மக்கள் ரஷ்ய படையினர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் கெர்சனின் பொதுமக்கள் பலரின் சாட்சியங்களை பிபிசி திரட்டியுள்ளது. ஒலெக்சாண்டர் என்பவர், கெர்சன் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பிலோசெர்காவில் வசித்து வருகிறார்.
அவர் கிராமத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.
இராணுவத்தில் பணியாற்றிய அவர், தற்போது தனது சொந்த தொழிலை நடத்துகிறார்.
அவரும் அவரது மனைவியும் பகிரங்கமாக ரஷ்யாவுக்கு எதிரானவர்கள்,
ரஷ்யாவுக்கு எதிரானவர்
அவர், ரஷ்யத் துருப்புக்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுப்பதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டார்.
இந்தநிலையில் இறுதியில் ரஷ்யா தமது கிராமத்தை கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே ரஷ்ய இராணுவத்தினர் அவரைத் தேடினர்.
இதனையடுத்து அவரை பிடித்த ரஷ்ய படையினர், அவரது கழுத்தில் ஒரு கயிறு மற்றும் மணிக்கட்டில் மற்றொரு கயிற்றை கட்டினார்கள். அவரிடம் விசாரணை நடத்தியபோது கால்களை அகல விரித்து நிற்கக் கூறியுள்ளார்கள்.
தாம் பதில் சொல்லாததால் ரஸ்யர்கள், அவரின் கால்களுக்கு அடித்ததாக ஒலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விழுந்தவுடன், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அவர் எழுந்திருக்க முயற்சிக்கும்போது, ரஷ்யவர்கள் அவரை தாக்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் காணாமல் போயுள்ளனர்
பல நேரடி சாட்சியங்களின்படி, பொதுமக்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.
கெர்சனுக்குள், ரஷ்யா தனது பிடியை இறுக்கியுள்ளதால், மக்கள் வெளியே பேசுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.
அங்குள்ளவர்களின் தொலைபேசிகளிலிருந்து அனைத்து புகைப்படங்களையும் காணொளிகளையும் அடிக்கடி ரஷ்ய படையினர் நீக்குகிறார்கள் என்றும் ஒலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறைப்படுத்தப்பட்டபோது உக்ரைனியர்கள் பலர், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.