பொது வேட்பாளரை நிறுத்துவது அபிவிருத்தியை பின்னடிக்கும் செயற்பாடு : திலீபன் எம்.பி
பொது வேட்பாளரை நிறுத்துவது மக்களையும், அவர்களுக்கான அபிவிருத்தியையும் பின்னடிக்கும் ஒரு செயற்பாடு என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) நேற்று (26.06.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேரம் பேசும் சக்தி
மேலும் தெரிவிக்கையில், ”நாம் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும் எனில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறாரோ அல்லது அந்தப் போட்டியில் யார் முன்னிலையில் உள்ளாரோ அவருடன் தான் பேரம் பேச முடியும்.
சம்மந்தமில்லாதவருக்கு ஆதரவு அளிப்பது எமக்கு இழப்பு தான். அது ஆரோக்கியமானது அல்ல.
ரணில் விக்ரமசிங்க, சஜித், அனுர ஆகியோர் தான் இந்த போட்டியில் உள்ளனர். அவர்களுடன் பேசி அல்லது அதில் வெல்லக் கூடியவருடன் பேசித் தான் நாம் எமக்கானவற்றை பெற வேண்டும்.
அதைவிடுத்து பொது வேட்பாளர் என்பது தேவையற்ற விடயம். பொது வேட்பாளர் என ஒருவரை நிறுத்துவது எமது மக்களையும், அவர்களது அபிவிருத்தியையும் மேலும் பின்னுக்கு கொண்டும் செல்லும் செயற்பாடு” எனவும் திலீபன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |