மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதனை நிறுத்துக – ICJ
மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடவியலாளர்கள், மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதனை நிறுத்த வேண்டுமென கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சுகாதார அமைச்சின் முன்னாள் பேச்சாளர் டொக்டர் ஜயருவான் பண்டாரவிற்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
டொக்டர் ஜயருவான், கோவிட் பரிசோதனை முறைமை தொடர்பிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து அவிசாவளை வைத்தியசாலையின் மருத்துவர் டொக்டார் நாஜித் இந்திக்க சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமூக ஊடகங்களில் போலித் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சிலர் அண்மையில்கைது செய்யப்பட்டிருந்தனர்.
கோவிட் தொற்று கட்டுப்படுத்துகை தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் நபர்கள் அடக்கிஒடுக்கப்படுவதாக சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு பணிப்பாளர் Ian Seiderman தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan