அநுராதபுரத்தில் தொடருந்து தண்டவாள இரும்புகள் திருட்டு
அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியுடைய தொடருந்து தண்டவாள இரும்புகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளின் ஒரு கட்டமாக சாலியபுர பிரதேசத்தில் தொடருந்து பாதை தற்போதைக்கு புனரமைக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
இதனை முன்னிட்டு அப்பிரதேசத்தில் தொடருந்து பாதையில் இருந்து அகற்றப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான 15 தண்டவாள இரும்புகள் சிலரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அந்த அதிகாரி, தொடருந்து திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri