யாழில் கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் மீட்பு (Photos)
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (31.01.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று இரவு வடமராட்சி திக்கம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் புகுந்த சந்தேக நபர், அங்கிருந்த 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தங்க நகைகள் மீட்பு
இது குறித்து கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட நகைகளை நெல்லியடி பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்கு முற்பட்டபோது, குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இதன் போது, குறித்த சந்தேக நபரிடருந்த 17 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
[VWKVCC ]
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையில், பருத்தித்துறயு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, உப பொலிஸ் பரிசோதர்களான குமாரசிறி, விராஜ், பொலிஸ் சார்ஜன்களான குமார, ஒளிவேரா, பொலிஸ் காவலர்களான ஆர்.திருச்செல்வம், அபயரத்தின, மதுசன், இந்திக்க, நந்தசேன, ஜெயநித்தி, மற்றும் பெண் பொலிஸ் காவலர்களான ஆயிஷா, கிமானி, மதுசானி ஆகியோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan