டோசிலிசுமாப் மருந்துகள் இந்த வாரம் நாட்டிற்கு கிடைக்கும்!
தற்போது வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக இருக்கும் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் (Tocilizumab) மருந்தின் பங்குகள் இந்த வாரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒளடதங்கள் தொடர்பான பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் பிரியதர்ஷனி கலப்பதி இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறிள்ளார்.
“உலகம் முழுவதும் உள்ள தேவை காரணமாக இநத மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தை கோவிட் நோயாளிகளுக்கு இரண்டாவது மருந்தாக பரிந்துரைத்துள்ள நிலையில், அதன் அதிக பயன்பாடு காரணமாக பற்றாக்குறை உருவாகியுள்ளது.
இந்த மருந்து கோவிட் -19 வழக்குகளுக்கு சிகிச்சையளிக்க தயாரிக்கப்படவில்லை, முடக்கு வாதம் நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
மருந்து உற்பத்தியாளர்கள் முடக்கு வாதம் நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே இந்த மருந்தை பயன்படுகிறார்கள், கோவிட் -19 நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
உலகம் முழுவதிலுமிருந்து தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அனைத்து கோவிட் -19 நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan