அமெரிக்காவில் சரிவு கண்டுள்ள பங்குச் சந்தைகள்
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான காலம் முடிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளன.
வர்த்தக தடைகள்
இதேவேளை, சீன இறக்குமதிகள் மீது, அமெரிக்காவினால் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக நாடுகளும், சில வாரங்களுக்கு முன்னர் இருந்ததை விட கணிசமாக அதிக வர்த்தக தடைகளை எதிர்கொள்கின்றன.
வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக மூன்று நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளன. இது வர்த்தகப் போரை விரிவுபடுத்துவதற்கான அச்சத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
