அதிரடி படையினர் துப்பாக்கி சூடு - முக்கிய குற்றவாளி பலி
மோதல் ஒன்றின்போது கொல்லப்பட்டதாக கூறப்படும், போதைப்பொருள் கடத்தல்காரர்- மாக்கந்துரே மதுஷின் நண்பர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் மரணமானார்.
இவர் ஆறு கொலைகள் உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற வகையில் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ பகுதியில் நேற்று இரவு வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வாகனத்தில் இருந்த 44 வயதான லலித் வசந்த பின்டெ காயம் அடைந்தார், உடனடியாக அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்தார் .
இவர் 1991 முதல் சீதுவ, வத்தளை, மாத்தறை, , அகுரஸ்ஸ கட்டுநாயக்க மற்றும் ராகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த பல குற்றங்கள் மற்றும் ஆறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மேலும் இரண்டு பேர் காருக்குள் இருந்ததாகவும், சம்பவ இடத்தில் மைக்ரோ பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹான தெரிவித்தார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri