மெதமுலனவில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமுலன பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபரின் இல்லம் நேற்றுமுன்தினம்(27.4.2026) சோதனை நடாத்தப்பட்டது.
இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ரி - கட்டஸ்’ ரக துப்பாக்கி மற்றும் இரண்டு ரி - 56 ரகத் தோட்டாக்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, மெதமுலன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri