யாழ்ப்பாண நகரத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவான கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்றையதினம் (22.04.2026) பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக
கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வரவேற்புரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் யாழ்ப்பாண நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பங்குதாரர்களுடன் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பிரதிநிதிகள் என உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.








Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam