பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி அபகரிப்பு: சந்தேகநபரை மடக்கிப்பிடித்த இளைஞருக்கு பாராட்டு
பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து அவரிடமிருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

பொலிஸார் பாராட்டு
இதன்போது குறித்த வீதியால் மீரிகம நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை தப்பிச்செல்லவிடாது வழிமறித்துள்ளார்.

இதனையடுத்து தப்பிச்சென்ற இருவரையும் முச்சக்கர வண்டி சாரதி பொதுமக்களின் உதவியுடன் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த செயலை பாராட்டும் முகமாக குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு பண பரிசில்களை வழங்கி பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan