டொலர்களை பதுக்கியவர்களின் பரிதாப நிலை - மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்
மத்திய வங்கி வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தில் டொலர்களை தம்வசம் வைத்திருந்தவர்கள் நாணயத்தை மாற்றியிருந்தால் அதிக பெறுமதியை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்புச் சந்தையில் மாற்ற முயற்சி
“டொலர் பரிமாற்றத்தை மறைத்து வைத்திருந்தவர்கள் இப்போது கறுப்புச் சந்தையில் அவற்றை மாற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் குறைந்த விலையைப் பெறுகிறார்கள்.
டொலரை சேகரிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும், டொலர்களை சேகரிக்கும் இறக்குமதியாளர்களுக்கும், கறுப்பு சந்தையில் டொலர்களை சேகரிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் அந்த டொலர்களை ரூபாய்க்கு மாற்ற நாங்கள் ஒரு மாத அவகாசம் கொடுத்தோம். ஆனால் 30 மில்லியன் டொலர்கள் மட்டுமே வசூல் செய்யப்பட்டது.
எங்கள் பேச்சைக் கேட்ட ஏற்றுமதியாளர்கள் அந்தக் காலகட்டத்தில் ஒரு டொலருக்கு சுமார் 365.00 முதல் 370.00 ரூபா வரை பெற்றனர். அதனால்தான் நாங்கள் சந்தையில் தலையிட்டோம்.
தற்போது டொலர்கள் அவசர அவசரமாக ரூபாவிற்கு மாற்றப்படுகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
