மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கான அந்தஸ்து
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு (Ajith Nivard Cabraal) அமைச்சரவை அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உயர் நிலைப் பதவிகளின் அடிப்படையில் ஐந்தாம் இடம் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சருக்கு வழங்கப்படுகின்றது.
இதன்படி, இனி வரும் காலங்களில் நடைபெறும் அரச நிகழ்வுகளின் போது அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சர் ஒருவருக்கான சகல மரியாதையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச பதவி நிலை அடிப்படையில் முதல் இடம் ஜனாதிபதிக்கும், இரண்டாம் இடம் பிரதமருக்கும், மூன்றாம் இடம் சபாநாயகருக்கும் வழங்கப்படுகின்றது.
நான்காம் இடம் பிரதம நீதியரசருக்கு வழங்கப்படுகின்றது. ஐந்தாம் இடம் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர், பீல்ட் மார்ஷல் மற்றும் மத்திய வங்கி ஆளுனருக்கும் வழங்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வந்த அஜித் நிவாட் கப்ரால், அந்தப் பதவியை துறந்து விட்டு மத்திய வங்கியின் ஆளுனராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.