அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளின் நிலை..
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக (CHOGM) இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் ஒன்பது பேருந்துகள், இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
375 இலட்சம் ருபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று கட்டுபெத்த சூப்பர் சொகுசு சுற்றுலா சாலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு, அவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
நீண்ட தூர வழித்தடங்களுக்கு
மீதமுள்ள பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், உதிரி பாகங்கள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவை மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காலி, மாத்தறை மற்றும் கண்டி போன்ற இடங்களுக்கு நீண்ட தூர சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது.
இந்த பேருந்துகள் ஆரம்பத்தில் குறுகிய தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும், பின்னர் நீண்ட தூர வழித்தடங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
