தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட ஆதாரங்களை மரபணு பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கை
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகங்கள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
